சென்னையில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் திறப்பு

0 287

162 கோடி ரூபாய் மதிப்பிலான குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் அம்மா திருமண மண்டபத்தை காணொலிக் காட்சி மூலமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

வீட்டுவசதி துறை சார்பில், சென்னை மகாகவி பாரதியார் நகரில், 129 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 510 குறைந்த வருவாய்ப் பிரிவு வீடுகள், முகப்பேர் கிழக்கு பகுதியில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர் வருவாய் பிரிவினருக்கான 40 வீடுகள் ஆகியவற்றை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும், மதுரை அண்ணாநகரில் 5 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments