டெல்லி தீ விபத்து- உயிர் போகும் நேரத்தில் மனதை உருக்கும் சம்பவம்

0 424

வடக்கு டெல்லியின் அனாஜ் மண்டியில் நேற்று நிகழ்ந்த தீ விபத்தில் 43 பேர் பலியான நிலையில், விபத்தில் சிக்கி பலியான ஒருவர் கடைசியாக தன் நண்பருக்கு கால் செய்து உருக்கமாக பேசிவிட்டு உயிரை விட்டுள்ளார்.

டெல்லி ராணி ஜான்சி சாலையில் உள்ள அனஜ் மண்டி பகுதியிலுள்ள 4 மாடி கட்டிடத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு பணியாற்றும் பல தொழிலார்கள் கட்டிடத்தினுள் நேற்று உறங்கிய போது அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கினர்.

இதில் சிக்கி உயிருக்கு போராடியவர்களில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த முகமது முஷாரப், ஊரில் உள்ள தன் நெருங்கிய நண்பருக்கு போன் செய்து கடைசி நிமிடத்தில் உருகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடும் தீயில் சிக்கி கட்டிடத்தை விட்டு வெளியேற வழி இல்லை என்று தெரிந்த அடுத்த நொடியே, நண்பர் மோனு அகர்வாலுக்கு கால் செய்துள்ளார் முகமது முஷாரப். அதிகாலையிலேயே நண்பரிடம் இருந்து போன் வந்ததும் சிறு குழப்பத்திற்கு பின்னர் பேசியுள்ளார் மோனு.

எதிர் முனையில் பேசிய முகமது முஷாரப்பின் பின்னால் மரண ஓலம் கேட்டதால் அதிர்ந்த மோனு, பதற்றத்துடன் என்ன ஆயிற்று என கேட்டுள்ளார். அதற்கு முகமது தாம் பெரிய தீ விபத்தில் சிக்கி விட்டதாகவும் , உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை எனவும் கதறியுள்ளார். எனவே நான் இறந்த பிறகு என் குடும்பத்தை பத்திரமாக பார்த்து கொள், அது உன்னுடைய பொறுப்பு. நீ இருக்கிறாய் என்ற நம்பிக்கையில் தான் நான் இந்த உலகை விட்டு செல்கிறேன் என உருக்கமாக பேசியுள்ளார்.

இதனால் அதிர்ந்த சோனு உனக்கு ஒன்றும் நேராது பயப்படாமல் தைரியமாக இரு. கட்டிடத்தில் இருந்து குதித்து விடு என்று கூறியுள்ளார். மேலும் தகவல் தெரிவித்த சோனு தீயணைப்பு வண்டி வரும் சத்தம் கேட்கிறது என்று கூறியபடியே முகமது ஏதோ பேசினான், அதோடு லைன் கட் ஆகிவிட்டது. பின்னர் நான் புறப்பட்டு டெல்லி சென்ற போது நண்பன் முகமதுவை சடலமாக தான் பார்க்க முடிந்தது என கதறியபடி கூறினார் சோனு.

மேலும் நான் ஒரு சகோதரனை இழந்துவிட்டேன், அவருடைய குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்திலேயே இனி நான் வாழ்வேன் என்று உருக்கமாக கூறியுள்ளார். தீ விபத்தில் இறந்த முகமதுவிற்கு 3 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தான் இருவரும் ஒரு திருமண விழாவில் சந்தித்து கொண்டதாக கூறிய சோனு, அதுவே எங்களது கடைசி சந்திப்பாக இருக்கும் என சற்றும் நினைக்கவில்லை என்று கண்ணீர் விட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments