தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை குறைக்க மத்திய அரசு முடிவு

0 352

வருங்கால வைப்பு நிதிக்கான தொழிலாளர்களின் பங்களிப்பை 12 சதவிகித்தில் இருந்து குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தொழிலாளர்கள் மாத ஊதியத்தில் அதிகபட்ச தொகையை வீட்டுக்கு எடுத்துச் செல்ல உதவும் நோக்கில் இந்த மாற்றம் கொண்டு வரப்படுகிறது. விரைவில் நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டதிருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.

தற்போது தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தில் 12 சதவிகிதம் பிடித்தம் செய்யப்பட்டு வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்படுகிறது. இது எந்த அளவிற்கு குறைக்கப்படும் என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

தொழிலாளர்களின் பங்களிப்பு குறைந்தாலும், தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்காக செலுத்தும் இ.பி.எஃப். பங்களிப்பு 12 சதவிகிதமாக தொடரும். இ.பி.எஃப். பங்களிப்பு குறைக்கப்படுவதற்கு இடதுசாரி தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments