சென்னை கோயம்பேடு சந்தையில் சற்று குறைந்தது வெங்காயத்தின் விலை

0 432

சென்னை

சீரான வரத்து துவங்கியுள்ளதால் சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை சற்றே குறைந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் சோலாபூரில் இருந்து வெங்காயத்துடன் புதிதாக 15 லாரிகள் இன்று கோயம்பேடு வந்துள்ளன. இதன் காரணமாக நேற்று ஒரு கிலோ 180 ரூபாய்க்கு விற்பனையான பெரிய வெங்காயம், இன்று சற்றே விலை குறைந்து கிலோ 140 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதே போல் ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையான சின்ன வெங்காயமும் விலை குறைந்து, கிலோ 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆந்திரா வெங்காயம் சராசரியாக நாளொன்றுக்கு 40 லாரிகள் வரை இறக்குமதியாவதால் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவால், வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது.

50 கிலோ எடை கொண்ட சின்னவெங்காயம் ஒரு மூட்டை எட்டாயிரத்து 500 ரூபாய்க்கும், 50 கிலோ எடை கொண்ட பெரிய வெங்காய மூட்டை பத்தாயிரம் ரூபாய்க்கும் கொள்முதல் செய்வதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாங்கிய அதே விலைக்கு சின்ன வெங்காயம் கிலோ 160 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்தாலும், பொதுமக்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டுவதாக  வியாபாரிகள் கூறுகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments