ஊழலக்கு எதிரான போராட்டத்தில் ஒரு அடியை எடுத்து வைப்போம்-சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்.

0 177

கண்ணுக்கு தெரியாத நோய்களை அழித்துவிடலாம் ஆனால் ஊழலை ஒழிக்க முடியாத நிலையாக இருக்கிறது.இன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்.

 ஐ.நா சபை ஊழலெதிர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்றி 2003 ஆம ஆண்டு முதல் டிசம்பர் 9 ஆம் நாளை ஊழல் எதிர்ப்பு தினமாக அறிவித்துள்ளது.எந்த ஒரு நாட்டின் வளர்ச்சி திட்டங்களை ஊழல் அரசு முடக்கிறதோ அல்லது சீரழிக்கிறதோ அந்நாடு வளமான நாடு அல்ல

ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்டர்ஸ் குறிப்பிட்டுள்ள அறிக்கையில் ”ஊழல் அனைவருக்கும் தீங்கு விளைவிக்கிறது, ஆனால் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும்; ஊழலைக் கையாள்வது வறுமையை சமாளிப்பதாகும்.”என்கிறார்

யார் ஒருவர் வறுமையால் வாடுகிறாரோ அதற்கு முக்கிய காரணம் ஊழலாகத் தான் இருக்க வேண்டும் .லஞ்சம் வாங்குவதும் குற்றம்,கொடுப்பதும் குற்றம் என்ற வாசகம் அனைத்து அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்களில் எழுதப்பட்டு இருப்பதை அனைவரும் கண்கூடாக பார்க்க இயலும்.அது ஒரு பலகையில் எழுதப்பட்டிருக்கும் வாசகமே தவிர நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வி அனைவரிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது.

கண்ணுக்கு தெரியாத எதிரியை கூட நம்மால் அழித்து விட முடியும் ஆனால் ஊழல் மற்றும் லஞ்சம் என்ற கொடிய நோய்கள் யார் கண்ணுக்கும் சிக்காதவை..ஒவ்வொரு வருடமும் உலகில் உள்ள  ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.2018 ஆம் ஆண்டு கணக்கின் படி 180 நாடுகளில் இந்தியா 78 வது இடத்தில் இருக்கிறது.2017 ஐ காட்டிலும் ஊழல் குறைந்தே காணப்படுகிறதுஆனால் ஆசிய நாடுகளை பொறுத்துவரை இந்தியா முதலிடத்தில் தான் உள்ளது,அடுத்து மியான்மர் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. ஊழல் குறைந்த  பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது அங்கு 0.2 சதவீதத்தினர் பணம் கொடுத்து தங்களது காரியங்களை செய்து கொள்கிறார்கள். தென்கொரியா அடுத்த இடத்திலும் உள்ளது.இங்கு 3 சதவீதம் லஞ்சம் கொடுக்கிறார்கள்.உலக வங்கியின் அறிக்கையின்படி ஒவ்வொரு ஆண்டும் ஒரு டிரில்லியனுக்கு அதிகமான லஞ்சங்கள் கொடுக்கப்படுகிறது.

image

பணம் என்றால் பிணம் கூட வாயை திறக்கும் “என்பார்கள்.உயிர் அற்ற மனிதனுக்கே இருக்கும் போது உயிருள்ள மனிதர்கள் சொல்லவா வேண்டும். ஊழல் நிறைந்த இந்தியாவில் அதிகாரிகள் மாறுகிறார்களோ இல்லையோ மக்கள் மாற வேண்டும்.காரணம் வேலை எளிதாக முடியவேண்டும் என்பதால் பணம் கொடுக்க ஆரம்பித்தார்கள்.”இப்பொழுது கட்டுபாடற்ற நிலையை கடந்து விட்டது.ஊழலே பழக்கபட்ட நம் நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் இதற்கெதிராக நிற்கவேண்டிய தலையாய கடமை ஆகும்.இந்திய அரசு ஊழலுக்கு எதிரான சட்டத்தை 1988 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு அதற்கான குற்றப்பிரிவுகளும்,தண்டனை விவரங்களும் வரையறை செய்யப்படுள்ளது .

இனிவரும் இந்தியா ஊழலற்ற அரசாக மாற வேண்டும் என்றால் இங்குள்ள ஆட்சியாளர்கள்,அதிகாரிகள்,ஊடகம் தனிமனிதன் எப்படி பாங்காற்ற வேண்டும் ஐ.நா வழிநடத்துகிறது.இதனை அறிந்து இன்று முதல் ஊழலக்கு எதிரான போராட்டத்தில் ஒரு அடியை எடுத்து வைப்போமாகimage

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments