லிப்ட் தருவதாக அழைத்து சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது

0 458

ஆந்திராவில் 16 வயது சிறுமிக்கு லிப்ட் தருவதாக கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பதியை அடுத்த திருச்சானூரை சேர்ந்த 16வயது சிறுமி ஒருவர், கடந்த 24ம் தேதி தனது வீட்டில் சண்டை போட்டுவிட்டு,கோபத்தில் திருப்பதிக்கு சென்றுள்ளார். பின்னர் திருப்பதியில் இருந்து மீண்டும் திருச்சானூருக்கு நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அந்த வழியாக வந்த சிறுமியின் நண்பரான வெங்கடேஷ், லிப்ட் தருவதாக கூறி, அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.

வழியில் முள்ளபுடி என்ற இடத்தில் பெட்ரோல் வாங்கி வருவதாக கூறி சிறுமியை இறக்கிவிட்டு சென்ற வெங்கடேஷ் தனது நண்பரான ராஜ்மோகன் நாயக்கை உடன் அழைத்து வந்த நிலையில் இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments