கால் கடுக்க நின்ற கர்ப்பிணி மனைவி.. முதுகையே நாற்காலியாக்கிய அன்பு கணவன்

0 732

கணவன் - மனைவி மற்றும் குடும்ப உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நம் நாடு தான் உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக உள்ளது. ஆனால் நம் அண்டை நாடான சீனாவிலும் கணவன் - மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்துள்ள ஒரு சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹெகாங் என்ற நகரத்தில், ஒரு தம்பதி மருத்துவமனை ஒன்றுக்கு சென்றுள்ளனர். மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதால், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக குறிப்பிட்ட மருத்துவமனைக்கு வந்துள்ளனர் தம்பதியர்.

image

 

மருத்துவமனையில் பெரும் கூட்டம் காணப்பட்டது. சிறிது நேரம் உட்கார கூட முடியாத அளவிற்கு நாற்காலிகள் முழுவதும் நிரம்பி வழிந்தன. கர்ப்பிணியாக இருந்த அப்பெண் வந்து நீண்ட நேரமாகியும், நாற்காலியில் உட்கார இடம் கிடைக்காததால் அவதியடைந்தார். அவரது நிலையை பார்த்த நாற்காலியில் அமர்ந்திருந்த யாரும் எழுந்து நின்று இடம் கொடுக்கவில்லை.

ஒரு கட்டத்தில் அந்த கர்ப்பிணி பெண் கடும் கால் வலியால் அவதிபட்டார். தன் மனைவியின் நிலை கண்டு பொறுக்க முடியாத அந்த கணவர் சட்டென்று தரையில் முட்டி போட்டு தனது முதுகில் உட்கார சொன்னார்.

image

இதற்கு மேல் வேறு வழியில்லை என்ற நிலையில் தனது கணவரது முதுகில் உட்கார்ந்து கொண்டார் அந்த கர்ப்பிணி பெண். மனைவியின் துயர் துடைக்க தனது முதுகையே நாற்காலியாக தந்த கணவரின் செயல் அங்கிருந்த கேமராவில் பதிவானது. இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments