டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரரின் உருவம் பதித்த வெள்ளி நாணயம்- சுவிட்சர்லாந்து அரசு கவுரவம்

0 227

டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரின் உருவத்தை வெள்ளி நாணயத்தில் பதித்து சுவிட்சர்லாந்து அரசு கௌரவித்துள்ளது.

20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றியதுடன், ஏராளமான சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலும் பங்கேற்று கோப்பைகளை அள்ளிக் குவித்துள்ளார். விளையாட்டுத் துறையில் உயர்ந்த விருதுகளில் ஒன்றான, லாரஸ் உலக விளையாட்டு வீரர் விருதை 5 முறை வென்றவர் பெடரர்.

பல்வேறு சாதனைகளைப் படைத்த பெடரரை ஸ்விட்சர்லாந்து அரசு மேலும் கவுரவித்துள்ளது. ஸ்விஸ் மின்ட் எனப்படும் அந்நாட்டு வெள்ளி நாணயத்தில் பெடரரின் உருவத்தைப் பொறித்துள்ளது.

வாழும் காலத்திலேயே இத்தகைய சிறப்பு பெற்ற வீரர் இவர் ஒருவர்தான். 20 ஸ்விஸ் பிராங்க் நாணயங்களில் பெடரரின் உருவம் அச்சிடப்பட்டு அடுத்த மாதம் புழக்கத்துக்கு விடப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments