பாலியல், போக்சோ வழக்குகளை 2 மாதங்களில் முடிக்க வேண்டும் - முதலமைச்சர்கள், நீதிபதிகளுக்கு விரைவில் கடிதம்

0 300

பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்கு போலீஸ் விசாரணை 2 மாதங்களில் முடிக்கவேண்டும் என மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதவுள்ளதாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் துரதிருஷ்டவசமானது மற்றும் கண்டனத்திற்குரியது என்றார்.

நிலுவையில் உள்ள பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை ஏற்படுத்துமாறு நாட்டில் உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் வலியுறுத்த உள்ளதாகக் கூறினார்.

வழக்குகளின் காவல்துறை விசாரணையை 2 மாதங்களில் முடிக்க, மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கடிதம் எழுதவுள்ளதாக ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டார். 

நீதிமன்றத்துக்கு வரும் இத்தகைய வழக்குகள், 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments