ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் விண்கலத்திலிருந்து வெற்றிகரமாக பரிமாறி கொள்ளப்பட்ட உபகரணங்கள்

0 374

ஸ்பேஸ் எக்சின் டிராகன் விண்கலத்தில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்கள் வெற்றிகரமாக  பரிமாறி கொள்ளப்பட்டன.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையன பொருட்களை சுமந்து கொண்டு கடந்த 5-ம் தேதி, விண்வெளிக்கு அனுப்பப்பட்ட  இந்த டிராகன் விண்கலம் இந்திய நேரப்படி இன்று மாலை 3.35 மணி அளவில் விண்வெளி நிலையத்தை நெருங்கியது. 

விண்கலம் நெருங்கி வந்ததும், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஒரு கை போன்ற அமைப்பு நீண்டு விண்கலத்துடன் தன்னை இணைத்து கொண்டது. அந்த அமைப்பின் வழியாக இரண்டாயிரத்து 600 கிலோ எடையிலான முக்கியமான பொருட்கள் மற்றும் உபகரணங்கள் பரிமாறி கொள்ளப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments