5 ஆண்டுகளில் மட்டும் ஐஐடி கல்லூரி மாணவர்கள் 27 பேர் தற்கொலை

0 251

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், ஐஐடி கல்லூரிகளைச் சேர்ந்த 27  மாணவர்கள் தற்கொலைசெய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்திர சேகர் கவுர் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில் இது தெரியவந்துள்ளது. அந்த வகையில், சென்னை ஐஐடியில் மட்டும்  கடந்த 5 ஆண்டுகளில் 7 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது. அதிக தற்கொலைகள் நடைபெற்ற ஐஐடிகளின் பட்டியலில் சென்னையே முதலிடத்தில் உள்ளது.

காரக்பூரில் 5 மாணவர்களும், டெல்லி மற்றும் ஐதராபாத்தில் தலா 3 மாணவர்களும் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 10 ஐஐடிகளில் இந்த தற்கொலைகள் நடைபெற்றுள்ள நிலையில், மாணவர்களின் தற்கொலைக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments