பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு துணிச்சலான அரசியல், நிர்வாக திறன்களால்தான் முடிவு கட்ட முடியும்

0 166

பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு சட்டங்களால் முடிவுகட்ட முடியாது, துணிச்சலான அரசியல், நிர்வாக திறன்களால்தான் முடிவுகட்ட முடியும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

புனேயிலுள்ள தனியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், இந்திய கலாசாரமானது, பெண்களை தாயாகவும், சகோதரியாகவும் பாவிக்கும் கலாசாரம் என்றும், ஆனால் நாட்டின் சில பகுதிகளில் அண்மையில் நடைபெற்ற  சம்பவங்கள் அவமானத்துக்குரியவை, இதனால் நாட்டுக்குதான் அவப்பெயர் ஏற்படுகிறது என்றும் கூறினார்.

புதிய சட்டங்களை இயற்றுவதால் இது போன்ற சமூக தீமைகளுக்கு தீர்வு காண முடியாது என்ற அவர், டெல்லி நிர்பயா பாலியல் சம்பவத்துக்கு பிறகு கொண்டு வரப்பட்ட சட்டத்தால் என்ன பயன்  கிடைத்தது எனவும் கேள்வியெழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments