உன்னாவ் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் தகனம்

0 308

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்த கும்பலால் தீயிட்டு எரிக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து 2 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த பெண்ணின் உடல்  அடக்கம் செய்யப்பட்டது.

குடும்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு, ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் வந்து உறுதியளிக்க வேண்டுமென்றும், அதுவரை பெண்ணின் சடலத்தை அடக்கம் செய்ய மாட்டோம் என்றும் குடும்பத்தினர் அறிவித்திருந்தனர்.

எனினும் பேச்சுவார்த்தையில் ஆதித்யநாத் நேரில் வருவது தவிர்த்து பிற கோரிக்கைகளை ஏற்று, தங்களுக்கு சொந்தமான நிலத்தில் சடலத்தை குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இதில் அமைச்சர்கள் ஸ்வாமி பிரசாத் மெளரியா, கமல் ராணி வருண் (( Swami Prasad Maurya,Kamal Rani Varun)), உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments