பெண்கள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்புவது கேள்விக்குறியாகியிருக்கிறது - தமிழிசை வேதனை

0 268

பெண்கள் சுதந்திரமாக வெளியே சென்று விட்டு வீடு திரும்ப முடியுமா என்பது கேள்விக்குறியாகி இருப்பதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடில் உள்ள ரோகிணி திரையரங்க வளாகத்தில், தமிழ்நாடு வாணியர் பேரவை நடத்தயிருக்கும் இலவச ஐஏஎஸ், ஐபிஎஸ், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான (( IAS IPS TNPSC))  பயிற்சி வகுப்புகளை அவர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக கூறினார்.

பாலியல் ரீதியிலான தாக்குதலில் இருந்து தப்பிக்க பெண்கள் நகங்களையும் பற்களையும் ஆயுதங்களாக பயன்படுத்த வேண்டும் என்ற அவர், பெண்கள் தற்காப்புக் கலை கற்பது அவசியம் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments