உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை

0 916

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சித் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்ட அறிவிப்பில், உள்ளாட்சித் தேர்தல் முழுமையான மக்களின் தேர்வாக இருக்க போவதில்லை எனும் உண்மை அனைவரும் அறிந்ததே என்றும், ஆதலால் மக்கள் நீதி மய்யம் பங்கு பெறுவதால் கிட்டக்கூடிய முன்னேற்றம் சொற்பமானதே என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே இருகட்சிகள் எழுதி இருக்கும் அரசியல் நாடகத்தில் எந்த பாத்திரத்தையும் ஏற்க மாட்டோம் என்பதே மக்கள் நீதி மய்யத்தாரின் பிரகடனமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள கமல் ஹாசன், வரும் 50 வாரங்களில் மக்கள் நலம்பேணி நற்பணிகளை கட்சியினர் செய்ய வேண்டும், 2021 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதே இலட்சியமாக இருப்பின், வெற்றி நிச்சயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments