சிலம்பாட்ட வீரர்களுக்கான போட்டித் தேர்வு

0 129

மதுரையில் சர்வதேச சிலம்பம் போட்டிகள் வரும் ஜனவரி மாதம் நடைபெறுவதை முன்னிட்டு, வீரர்கள் தேர்வு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

நாகமலை புதுக்கோட்டையில் உள்ள காமராஜர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் இருந்து சிலம்பாட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு சிலம்பம், ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, சுருள்வாள் வீச்சு போன்றவற்றை செய்து காட்டி அசத்தினர்.

இதில் தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகள் ஜனவரி மாதம் நடைபெறும் சர்வதேச சிலம்பப் போட்டியில் பங்குபெறும் வாய்ப்பை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments