நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

0 200

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கனமழையால் ஆங்காங்கே சாலைகளில் மண் சரிந்தும், பாறைகள் விழுந்தும் போக்குவரத்து தடைப்பட்டதால் சுற்றுலாப்பயணிகளின் வரத்து குறைந்திருந்தது.

இந்நிலையில் தற்போது மழை குறைந்து சீரான கால நிலை நிலவுவதாலும், வார விடுமுறையை முன்னிட்டும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்தது.

உதகை தாவரவியல் பூங்கா புல்வெளியில் விளையாடி மகிழ்ந்த பயணிகள், புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். படகு இல்லம், டால்பின் நோஸ் கேத்ரீன் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளிலும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments