ரூ.3.62 கோடி மதிப்பீட்டில் இரட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்

0 109

கரூர் நகரப்பகுதியில் உள்ள இரட்டை வாய்க்கால் தூர்வாரும் பணியை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

அமராவதி ஆற்றிலிருந்து பிரிந்து பள்ளப்பாளையம் ராஜவாய்க்கால் வரை செல்லும் கரூர் இரட்டை வாய்க்காலை தூர்வார, நகர்புற வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூபாய் 3 கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, சுமார் ஆயிரத்து 300 மீட்டர் தூரத்திற்கு இரட்டை வாய்க்காலை தூர்வாரி, அதன் கரையை பலப்படுத்தும் பணியை துவக்கி வைத்த போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்பகுதி மக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments