எதிர் முனையில் இருந்து தனியொரு ஆளாக பந்தை விரட்டிச் சென்று கோல் அடித்து அசத்திய வீரர்

0 312

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில், சன் ஹியூங் மின் (Son Heung-min) என்ற வீரர் மைதானத்தின் அடுத்த முனையில் இருந்து தனி ஒரு ஆளாக பந்தை விரட்டிச் சென்று கோல் அடித்து அசத்தினார். இதனால், அவரை அடுத்த மெஸ்ஸி என ரசிகர்கள் புகழ்கின்றனர்.

டாட்டென்ஹாம் FC (Tottenham) அணி பர்ன்லீ (Burnley)யை எதிர்த்து விளையாடியது. Tottenham FC அணிக்காக விளையாடிய தென்கொரியாவின் சன் ஹியூங் மின், தனது கோல் போஸ்ட் அருகே எதிர் அணி வீரர்களிடம் இருந்து பந்தை கைப்பற்றினார்.

பின்னர், எதிர் அணி வீரர்களை மீறி, தனிஒரு ஆளாக பந்தை விரட்டிச் சென்று கோல் அடித்தார். இதனால், ரசிகர்கள் அவரை மெஸ்ஸி, ரொனால்டோ, மரடோனா போன்ற வீரர்களுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.

மேலும், ரொனால்டோவின் பெயரை இணைத்து, சன்-ஆல்டோ ("Son-aldo") என்றும் பாராட்டுகின்றனர். இந்த போட்டியில் டாட்டென்ஹாம் அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments