வடகொரியா இன்று மிக முக்கிய சோதனையை நடத்தியிருப்பதாக தகவல்

0 245

வடகொரியா இன்று மிக முக்கிய சோதனையை நடத்தியிருப்பதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையின்போது, தங்களது நாட்டிலுள்ள சோஹே (Sohae) ஏவுதளத்தை மூட வடகொரியா சம்மதித்ததாக முன்பு தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், அந்த ராக்கெட் ஏவுதளத்தில் மிக முக்கிய சோதனையை நடத்தியிருப்பதாக வடகொரியாவின் அரசு ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது. ஆனால் சோதனை தொடர்பான வேறு எந்த எந்த விவரத்தையும் அது வெளியிடவில்லை.

அமெரிக்காவுடனான பேச்சு தடைபட்டுள்ளதால் புதிய பாதையில் செல்ல நேரிடும் என வடகொரியா எச்சரித்திருந்த நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments