T20 போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரரின் சாதனையை சமன் செய்த கோலி...

0 364

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்று, ஏற்கனவே, முதலிடத்தில் உள்ள ஆப்கானிஸ்தானின் முகமது நபியின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, 50 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். இதற்காக அவர் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். இது இவரது 12-வது டி-20 ஆட்ட நாயகன் விருது ஆகும்.

இதன் மூலம் 20 ஓவர் போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரர்களின் பட்டியிலில், முதலிடத்தில் உள்ள முகமது நபியுடன், கோலியும் இணைந்துள்ளார். இவர்களைத்தொடர்ந்து 2-ம் இடத்தில் பாகிஸ்தானின் ஷாயித் அப்ரீடி உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments