கீரிபிள்ளைகள் மீது பாசம் வைக்கும் முதியவர் -பூனையும் - கீரிப்பிள்ளையும் விளையாடும் அற்புதக் காட்சி

0 314

ந்த உயிரினத்தின் மீதும் அன்பு காட்டலாம் என்பதற்கு உதாரணமாக கீரிப்பிள்ளைகளை பாசமாக வளர்க்கும் முதியவரை பற்றி விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு....

பொதுவாகவே, வீட்டில் நாய், பூனை உள்ளிடப் பிராணிகளை வளர்ப்பது இயல்பான விஷயம் தான். ஆனால் தூத்துக்குடியில், முதியவர் ஒருவர் கீரிப்பிள்ளைகளை செல்லமாக வளர்ப்பதை பலரும் வியப்பாக பார்த்து செல்கின்றனர்.

தூத்துக்குடியில் பழமை வாய்ந்த பள்ளிவாசலில் பணியாற்றி வரும் அமீர் அம்சாதான், கீரிப்பிள்ளைகளை பாசமாக வளர்த்து வருபவர். அறிவு, எலி குஞ்சு என்று இவர் பெயர் சொல்லிக் அழைக்கும் போது, அன்பாய் ஓடி வருகின்றன கீரிப்பிள்ளைகள்.

கடந்த 7 ஆண்டுகளாக இந்த முதியவர் கீரிப்பிள்ளைகளுடன், பூனைகளையும் சேர்த்து வளர்த்து வருவதால், இரண்டும் நண்பர்கள் போலவே விளையாடி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தான் செல்லமாக வளர்க்கும் இந்த கீரிப்பிள்ளைகளுக்கு தினமும், மீன் குழம்பும், இறைச்சி துண்டுகளை உணவாக வழங்கப்படுவதாக கூறுகிறார் அமீர் அம்சா.

பள்ளிவாசலில், கொக்கு, மயில், ஏராளமான கீரிப்பிள்ளைகள் வருவது தற்போது வாடிக்கையாகிவிட்டது என்றும், உயிரினங்கள் மீது அன்பு செல்லுதினால் அவை மீண்டும் அன்பு காட்டும் என்பதற்கு இந்த முதியவர் ஒரு உதாரணம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

உயிர்களிடத்தில் அன்பு செய் என்பதற்கு நல்ல உதாரணமாக இருந்து வரும் அமீர் அம்சாவின் செயல் அடுத்த தலைமுறைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments