டெல்லியில் இன்று மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு

0 157

தலைநகர் டெல்லியில், காற்று மாசு அளவு இன்று மீண்டும் மோசமான நிலையை அடைந்திருக்கிறது.

டெல்லி பல்கலைக்கழகம், சாந்தினி சவுக், திர்பூர், உள்ளிட்ட தலைநகரின் பல பகுதிகளில், காலை 9 மணி அளவில் எடுக்கப்பட்ட அளவீட்டின்படி, சராசரியாக, காற்று மாசு 370 என்ற அளவில் பதிவாகியுள்ளது.

அண்மை நாட்களாக காற்று மாசு குறைந்திருந்த நிலையில், மீண்டும் அதிகரித்து வருவதால், டெல்லி வாழ் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கடுங்குளிருடன் கூடிய பனிமூட்டமும், சாதகமான காற்று வீசாததாலும், காற்று மாசு மீண்டும் அதிகரித்திருப்பதாக, மத்திய காற்றுத் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆய்வு மையம், தெரிவித்திருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments