வெங்காய விலை ரூ.10 குறைவு

0 253

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபார மந்தநிலை காரணமாக ஒரு கிலோ பெரிய வெங்காயம் கிலோவுக்கு பத்து ரூபாய் குறைந்து 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வரத்து குறைவு காரணமாக கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று ஒரு கிலோ வெங்காயம் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் வெங்காயம் வாங்க தயக்கம் காட்டுவதால் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோவுக்கு பத்து ரூபாய் குறைத்து பெரிய வெங்காயம் கிலோ 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சின்ன வெங்காயம் 170 ரூபாய்க்கும், முருங்கைக்காய் கிலோ 300 ரூபாய்க்கும், பூண்டு கிலோ 240 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments