மதகுரு வீட்டை குறிவைத்து மர்ம நபர்கள் ட்ரோன் மூலம் ராக்கெட் வீச்சு

0 211

ஈராக்கில் பிரபல மதகுரு மொக்தாதா அல் சதரின் (Moqtada al-Sadr) வீட்டை குறிவைத்து மர்ம நபர்கள் ட்ரோனில் இருந்து ராக்கெட் வீசி தாக்கியுள்ளனர்.

ஈராக்கில் கடந்த சில மாதங்களாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் போராட்டம் காரணமாக அந்நாட்டின் பிரதமர் அதெல் அப்துல் மஹதி பதவியை ராஜினாமா செய்தார்.

ஊழலுக்கு  எதிரான நடவடிக்கை, வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு, மதகுரு மொக்தாதா அல் சதர் ஆதரவு தெரிவித்த நிலையில், அவர் வீட்டின் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments