ரெங்கநாதர் கோயிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் வஸ்திர மரியாதை

0 187

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரெங்கநாதருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

கி.பி.1320 ம் ஆண்டு வெளிநாட்டவர் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கத்தில் இருந்த உற்சவர் நம்பெருமாள் 40 ஆண்டுகளாக திருப்பதியில் உள்ள திருமலை கோயிலில் வைத்து பாதுகாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிலிருந்து ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி நாளில் ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ரெங்கநாதர் கோயிலுக்கு, திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து வஸ்திர மரியாதைகள் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கு மூலவரான ரெங்கநாதர், உற்சவர் நம்பெருமாள், ஸ்ரீரெங்கநாச்சியார் மற்றும் ராமானுஜருக்கு வஸ்திரங்கள், குடைகள் திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து கடந்த 7ம் தேதி கொண்டுவரப்பட்ட நிலையில் இன்று கோயில் நிர்வாகிகள் மற்றும் தலைமை அர்ச்சகர்களிடம் கொடுத்து மரியாதை செலுத்தப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments