பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் முக்கியத் தீவிரவாதி சரண்

0 231

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த முக்கியத் தீவிரவாதி சரணடைந்துள்ளான்.

புல்வாமா மாவட்டத்தில் ப்ராவ் பந்தினா என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த முஸாபர் அகமது வானி என்ற தீவிரவாதி பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தான்.

பாதுகாப்புப் படையினருடன் கடந்த மாதம் நடந்த மோதலின்போது முக்கியப் பங்கு வகித்தவன் முஸாபர் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவனை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments