தாலிபான் தீவிரவாதிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை

0 304

ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் நீண்ட காலப் போரை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு தாலிபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை கத்தாரில் மீண்டும் தொடங்கி உள்ளது.

தோஹாவில் தாலிபான்கள் சார்பாக ஸால்மே காலிசாத் என்பவருடன் பேச்சுக்கள் நடந்து வருவதாக அமெரிக்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருவதாகக் கூறிய அவர், இப்படியே சென்றால் 18 ஆண்டு கால போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே காந்தகார் மாகாணத்தில் உள்ள நிஷ் என்ற இடத்தில் சிறப்புப் படையினர் நடத்திய தாக்குலில் 15க்கும் மேற்பட்ட தாலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments