சிறுவர்கள் தொடர்பான பாலியல் வழக்குகளை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்

0 235

சிறுவர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளின் விசாரணை 2 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இக்கருத்தை வலியுறுத்தி அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகளுக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் குறிப்பிட்டார். நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க ஆயிரத்து 23 விரைவு நீதிமன்றங்களை அமைக்க மத்திய- மாநில அரசுகள் முன்மொழிந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

400 நீதிமன்றங்களை அமைக்க ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளதாகவும், 160க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments