இந்தியாவில் ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில்கள் மந்தம்

0 237

இந்தியாவில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனத் தொழில்கள் மோசமான சூழ்நிலையில் உள்ளதாக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 4 புள்ளி 5 விழுக்காடாக குறைந்துள்ளதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளில் இது மிகவும் குறைவானது என்றும் கூறினார்.

இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், முன்பைவிட வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் சொத்து தர மதிப்பாய்வை ரிசர்வ் வங்கி மேற்கொள்ள வேண்டும் என்று ராஜன் வலியுறுத்தினார். மத்திய அரசின் தவறான கொள்கையால் இந்தியாவின் கிராமப்புறங்கள் கடுமையான பாதிப்பை எதிர் கொண்டுள்ளதாகவும் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments