சீன விண்வெளித்துறையில் புதிய சாதனை..!

0 382

ஒரே நாளில் 6 மணி நேர இடைவெளியில் இரண்டு ராக்கெட்டுகளை ஏவி சீனா சாதனை படைத்துள்ளது. சான்சி மாகாணத்தில் உள்ள தையுவான் ஏவுதளத்தில் இருந்து கியூசௌ ராக்கெட் உள்ளூர் நேரப்படி காலை 10.55 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த ராக்கெட்டில் அனுப்பப்பட்ட ஜிலின்-1 காவோபென் 02பி ((Jilin-1 Gaofen 02B)) என்ற தொலை உணர்வு செயற்கைக்கோளை பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தியது. இந்த செயற்கைக்கோள் விவசாயம், வன இயல், வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான தரவு மற்றும் சேவைகளை வழங்கும்.

இதனைத் தொடர்ந்து, அதே ஏவுதளத்தில் இருந்து மாலை 4.52 மணிக்கு 6 சிறிய செயற்கைக்கோள்களுடன் மற்றொரு கியூசவ் 1ஏ ((Kuaizhou 1A)) ராக்கெட் ஏவப்பட்டது.

இரண்டு ராக்கெட்டுகளிலும் செலுத்தப்பட்ட 7 செயற்கைக்கோள்களும் திட்டமிட்டபடி புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments