கங்கை நதி கிளை கால்வாயில் மீன்கள் செத்து மிதப்பு

0 292

உத்தரப்பிரதேசத்தில் ஓடும் கங்கை நதி கிளை கால்வாயில் மீன்கள் ஏராளமான செத்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்துக்களின் புனித நதியாக கருதப்படும் கங்கை நதி ஏராளமான கிளை ஆறுகளையும், கிளை கால்வாய்களையும் கொண்டது. இந்த நதியின் கிளை கால்வாய் ஒன்று உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் வழியாக செல்கிறது.

அந்த கால்வாயில் நேற்று ஏராளமான மீன்கள் செத்து மிதந்ததைப் பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து நீர்வளத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் பேசிய அவர்கள் செத்த மீன்களை மர்ம நபர்கள் லாரிகளில் எடுத்து வந்து இந்த கால்வாயில் வீசிச்சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தனர். எனினும் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments