வடமாநிலங்களில் நெல், கோதுமை பயிரிடும் நிலப்பரப்பு அதிகரிப்பு

0 235

வடமாநிலங்களில் நடப்பாண்டு கோதுமை மற்றும் நெல் பயிரிடும் நிலப்பரப்பு அதிகரித்திருப்பதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடப்பு ரபி பருவத்தில் இதுவரையில் 20 லட்சம் ஹெக்டேர் பரப்புக்கு கோதுமை பயிரிடப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 4 புள்ளி 28 சதவீதம் அதிகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹிமாசலப் பிரதேச மாநிலங்களில் இதன் சாகுபடி பரப்பு கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் அந்த விபரப்பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, நெல் பயிரிடும் பரப்பு எட்டரை லட்சம் ஹெக்டேரிலிருந்து 10 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளதாகவும் வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேசமயம், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகள் பயிரிடும் பரப்பும் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments