சென்னை, தூத்துக்குடி, காரைக்காலில் நள்ளிரவில் பரவலாக மழை

0 354

சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும், காஞ்சிபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.

சென்னை 

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராயப்பேட்டை, மெரினா, மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், தாம்பரம் ஆகிய இடங்களில் காற்றுடன் மழை பெய்தது.  கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதிகளிலும் மழை பெய்ததால் இதமான சூழல் நிலவியது.

காஞ்சிபுரம் 

கடந்த சில நாட்களாக மழை நின்றிருந்த நிலையில், காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பாலுசெட்டிசத்திரம், செவிலிமேடு, ஓரிக்கை, வாலாஜாபாத் உள்ளிட்ட ஊர்களில் மீண்டும் மழை பெய்ததால் விவசாயம் செழிக்கும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நேற்று மாலை கனமழை பெய்ததால் குறிஞ்சிநகர், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கும் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments