கங்கை ஆற்றில் குளிப்பதில்லை..! ப.சிதம்பரம் திடீர் முடிவு

0 519

திகார் சிறையில் 106 நாட்கள் அடைக்கப்பட்டு, ஜாமீன் பெற்று தமிழகம் வந்துள்ள ப.சிதம்பரம், பாரதீய ஜனதா என்கிற கங்கை நதியில் ஒரு போதும் தான் குளிக்கபோவதில்லை என்று சூளுரைத்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கில் சிக்கிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், 106 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

ஜாமீன் பெற்ற பின்னர் தமிழகம் வந்த ப.சிதம்பரம் சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்கள் மத்தியில் முழங்கினார். அப்போது வ.உ.சிதம்பரம், பாலகங்காதர திலகர், ஜவகர்லால் நேரு, காமராஜர் போன்று தான் சிறையில் இருந்தது ஒன்று பெரிதல்ல என்றார்.

பாரதீயஜனதா என்னும் கங்கை நதியில் குளித்தால் பாவங்கள் போய் விடும் என்றார்கள். ஆனால் ஒருபோதும் தான் கங்கை நதியில் குளிக்கப் போவதில்லை என்று தெரிவித்தார் ப.சிதம்பரம்.

முன்னதாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மிகப்பெரிய செல்வந்தரான ப.சிதம்பரம் திகார் ஜெயிலில் மெத்தைகள் இன்றி மரக்கட்டிலில் தான் படுத்திருந்ததாக பேசினார். இதையடுத்து, அனைவரும் மரக்கட்டிலில் படுத்து பாருங்கள் என்று ப.சிதம்பரம் அறிவுரை கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments