திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கை பல மடங்கு உயர்வு

0 335

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை அதிகமாக கிடைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் 86.77 கோடி ரூபாய் காணிக்கையாக கிடைத்த நிலையில், இந்தாண்டு நவம்பர் மாதம் 93. 77 கோடி ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், கடந்தாண்டு நவம்பர் மாதம் 562 கிலோ தங்கம் காணிக்கையாக கிடைத்த நிலையில், நடப்பு ஆண்டு இதே காலகட்டத்தில் 803 கிலோ கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளையில், தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு நடப்பு ஆண்டில் நவம்பர் மாதத்தில் 35.16 கோடி ரூபாய் கூடுதலாக நன்கொடையும் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments