தமிழகத்திற்கு 500 டன் வெங்காயத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ

0 148

வெங்காய விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் வெங்காய விலை கட்டுப்படுத்தபடும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   மத்திய அரசால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தில் 500 டன் அளவிற்கு தமிழகத்திற்கு  ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்றார். 

குறைந்த விலைக்கு  தமிழகத்தில் பண்ணை பசுமை மையத்தில் வெங்காயம் விற்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். கள்ளச்சந்தையில் வெங்காயத்தை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments