திருப்பதி கோவிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனம் ரத்து

0 368

திருப்பதியில் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படும் என்று தேவஸ்தானம் கூறியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான செயல் அதிகாரி அனில் குமார் சிங்கால், திருப்பதியில் வரும் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 30, 31, ஜனவரி 1 மற்றும் ஜனவரி 5, 6, 7 ஆகிய தேதிகளில் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படும் என்றார்.

அந்த நாள்களில் வாடகை அறை முன்பதிவும் ரத்து செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். சூரிய கிரகணத்தை முன்னிட்டு வருகிற 25-ஆம் தேதி இரவு 11 மணி முதல் 26-ஆம் தேதி மதியம் 12 மணிவரை கோவில் மூடப்படும் என்றும், 26- ஆம் தேதி மதியம் 2 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments