கொடி நாள் நிதிக்கு மக்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் - பிரதமர் வேண்டுகோள்

0 192

முப்படை வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காக கொடிநாள் நிதிக்கு பங்களிப்பை வழங்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் கடந்த 1949-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.

கொடிநாள் தினத்தையொட்டி நடக்கும் கொடி விற்பனை மூலமும், நன்கொடைகள் மூலமும் திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் கொடிநாள் தினத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். கொடிநாள் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், படைவீரர்களுக்கு நாட்டு மக்கள் பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments