நீதி வழங்குதல் என்பது பழிவாங்குதல் அல்ல-தலைமை நீதிபதி

0 361

 நீதி வழங்குதல் என்பது பழிவாங்கும் செயலாக மாறி விடக்கூடாது என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கூறி உள்ளார்.

கிரிமினல் வழக்குகள் காலதாமதமின்றி விரைவாக தீர்க்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை என்று தெரிவித்துள்ள அவர், வேகமான தீர்ப்பு என்ற கோணத்தில் குற்றவாளிகள் பழிவாங்கப்படுவதை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தலைமை நீதிபதி, ஐதராபாத்தில் நடந்த அண்மைச் சம்பவங்களை மறைமுகமாக இவ்வாறு குறிப்பிட்டு பேசியுள்ளார்.

ஐதராபாத் பெண் கால்நடை மருத்துவர் கொலை குற்றவாளிகள் 4 பேரின் உடல்களை 9 ஆம் தேதி வரை பாதுகாத்து வைக்குமாறு தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 பேர் என்கவுன்டர் நீதிக்கு புறம்பானது எனவும், நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும் என்றும் வந்த கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் தலைமை நீதிபதி போப்டோவின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments