சென்னையில் ஜிஎஸ்டி கணக்கு தாக்கலுக்கான புதிய முறை குறித்து கருத்துக்கேட்பு

0 165

ஜிஎஸ்டி கணக்கு தாக்கலுக்கான புதிய முறை குறித்து கருத்து பதிவு கூட்டம் சென்னை நந்தனத்தில் நடைபெற்றது.

மத்திய மறைமுக வரிகள் வாரியம், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜிஎஸ்டி கணக்கு தாக்கலுக்கான புதிய முறையை அமல்படுத்த உள்ளது. இது தொடர்பான நேரடி கருத்து கேட்புக் கூட்டம், சென்னை தெற்கு மண்டல  ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் தலைமையில் நடைபெற்றது. 

புதிய ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் குறித்த கருத்துக்களும் பரிந்துரைகளும் இக்கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டன.

வரி செலுத்துவோர், ஜிஎஸ்டி ஆலோசகர்கள், பட்டய கணக்காளர்கள்,  தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளின் உறுப்பினர்கள் என 4 கட்டமாக இக்கூட்டம் நடைபெறுவதாக சென்னை தெற்கு ஜிஎஸ்டி இணை ஆணையர் ஷான் பாஷா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments