டி சர்ட்டை அழகாக துவைத்து வெளுத்த சிம்பன்சி.. குவியும் பாராட்டு

0 469

இயல்பாகவே மிகவும் புத்திசாலி என அறியப்படும் விலங்குகளில் ஒன்று தான் சிம்பன்சி குரங்குகள். இது ஒரு வாலில்லா ஒரு மனிதக் குரங்கு இனம்.

பல மரபியல் ஆய்வு முடிவுகள் மனிதரிலுள்ள 95-99% டி.என்.ஏ சிம்பன்சிகளில் டி.என்.ஏ யை ஒத்திருப்பதாக கூறியுள்ளன. இவை மனிதனை ஒத்திருந்தாலும், உருவில் சற்று சிறியதாக இருக்கும். இதனிடையே சீன நாட்டில் ZOO ஒன்றில் வளர்ந்து வரும் 18 வயதான சிம்பன்சி குரங்கு ஒன்று, அழுக்கான துணிகளை அழகாக துவைத்து தூய்மையாக்கி கொடுப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தென்மேற்கு சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் வளர்க்கப்படும் சிம்பன்சி, பராமரிப்பாளர் தனது துணியை துவைப்பதை பார்த்து தானும் ஆர்வமாக துணி துவைக்க கற்று கொண்டுள்ளது.

தனது காப்பாளரின் டி சர்ட் ஒன்றை முதலில் ஊறவைத்து சிறிது நேரம் சோப்பு போட்டு தேய்த்து, பின்னர் பிரஷ் கொண்டு நன்றாக அழுக்கு போக தேய்க்கிறது. பின்னர் தண்ணீரில் தனது காப்பாளரின் துணியை அலசோ அலசு என்று அலசி டி சர்ட்டை துவைக்கிறது. சுமார் அரை மணி நேரம் சிம்பன்சி இந்த வேலையை செய்துள்ளது. இதை அங்கிருந்தவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர்

இது குறித்து பேசிய ZOO ஊழியர்கள் குறிப்பிட்ட சிம்பன்சி சோப்பு மற்றும் பிரஷ் கொண்டு துணிகளை மிக நேர்த்தியாக மனிதர்களை போலவே பளிச்சென்று துவைப்பதாக கூறினர்.

மனிதனை போலவே துணியை துவைத்து காயப்போட்ட சிம்பன்சி குரங்கு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த சிம்பன்சி குரங்கிற்கு பாராட்டு குவிந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments