மழை நீர் வடியாததால் நிலக்கடலை பயிர்கள் சேதம்

0 268

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் மழை நீர் வடியாததால் நிலக்கடலை பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஓட்டிமேடு, பெருந்துறை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் பிரதானமாக மணிலா கடலை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த வாரம் பெய்த தொடர் மழையின் காரணமாக, நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. நீர் வடிய வழியில்லாமல் தொடர்ந்து தேங்கியதால், லேசாக முளை விட்டுள்ள விதைகள் அழுகத் தொடங்கியுள்ளன.

90 சதவீத விதை முளைக்காமலும், முளைத்த பயிர்கள் அழுகியும், சேதம் அடைந்துள்ளதாகவும், ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிட்ட நிலையில், வேளாண்துறை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments