பயிற்சி நிறைவு விழாவில் சத்திய பிரமானம் செய்துக் கொண்ட ராணுவ வீரர்கள்

0 216

குன்னூரில் நடைபெற்ற ராணுவ பயிற்சி நிறைவு விழாவில் வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ முகாமில், பல்வேறு மாநில இளம் ராணுவ வீரர்களுக்கு ராணுவபயிற்சி அளிக்கப்படுகிறது.

இதே போல பயிற்சி முடித்த 502 வீரர்களுக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதையொட்டி பயிற்சி முடித்த வீரர்கள் ராணுவ மிடுக்குடன் கம்பீரமாக அணிவகுத்து வந்தனர்.

46 வாரக்காலம் பயிற்சி நிறைவு பெற்றதை அடுத்து, நாட்டிற்காக அர்ப்பணிப்போடும், சேவை மனப்பான்மையோடும் செயல்படுவோம் என்று அவர்கள் சத்தியபிரமாணம் எடுத்துக் கொண்டனர். பயிற்சியின் போது சிறப்பாக செயல்பட்ட நான்கு வீரர்களுக்கு, பதக்கங்கள் வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments