தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

0 203

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் சாதக போக்கின் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்,நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியில் 6 சென்டிமீட்டர் மழையும், திருத்துறைப்பூண்டியில் 5 சென்டிமீட்டர் மழையும், காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் 3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments