VENEZUELA : பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பெண்கள் போராட்டம்

0 183

வெனிசுலா தலைநகர் கரகாஸ் நகரின் ((CARACAS)) பாரம்பரியா சின்னமாக கருதப்படும் Venezuela Square அருகே நூற்றுக்கணக்கான பெண்கள் ஒன்றுகூடி, நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், சிலி நாட்டு பெண்கள் பாடி, உலகம் முழுவதும் பிரபலமடைந்த, பெண்ணிய வன்முறைக்கு எதிரான பாடலைப் பாடியும், நடனமாடியும் தங்களது எதிர்பை வெளிப்படுத்தினர்.

மேலும் பாலின அடிப்படையிலான குற்றத்தை குறைக்க குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டணை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, மெக்சிகோ, பிரேசில், அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலிம் போராட்டம் நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments