ஜி.எஸ்.டி. சட்டத்தால் தமிழகத்திற்கு தொடர் நிதி இழப்பு - மு.க.ஸ்டாலின்

0 186

ஜி.எஸ்.டி. சட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததால் தமிழக அரசின் கஜானா காலியாகும் நிலை உள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஜி.எஸ்.டி சட்டத்தைச் செயல்படுத்தியதால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகை குறித்த வாக்குறுதியையும், சட்டத்தையும்  மத்திய அரசின் மீறி உள்ளதாக கூறியுள்ளார்.

ஜி.எஸ்.டி. சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் 9,270 கோடி ரூபாய் இழப்பீடு பற்றி மாநில அரசு சிறிதும் அக்கறை காட்டவில்லை என்று அவர் குற்றம் சாட்டி உள்ளார். 

“ஜி.எஸ்.டி மற்றும் இழப்பீடு வகையில் சுமார் 5,909 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ள நிலையில், மத்திய அரசிடமிருந்து ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையைப் பெற, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments