தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தின் மூத்த மகனுக்கு விரைவில் திருமணம்

0 921

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜயபிரபாகரனுக்கும் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகளுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான பூ வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த முத்திரைத்தாள் விற்பனையாளரான இளங்கோ என்பவரது மகள் கீர்த்தனா, திருச்சி சாலையில் பள்ளி ஒன்றை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இவரும் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள் என்று கூறப்படும் நிலையில், இந்த பூ வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை பெண்ணின் வீட்டிலேயே எளிமையாக நடைபெற்றது.

பிரேமலதா விஜயகாந்த், இளைய மகன் சண்முக பாண்டியன், சுதீஷ் உள்ளிட்ட சிலர் மட்டும் நிகழ்வில் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments