தங்கம் விலை சவரன் 29 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே சரிந்தது

0 815

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 224 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஏறுமுகமாக இருந்து தங்கம் விலை சமீப காலமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை 29 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 224 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 28 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 612 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

அதே போல் வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 46 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments