இந்தியா வலுவான நாடு என ராஜ்நாத் பெருமிதம்

0 398

லக நாடுகள் மத்தியில் இந்தியா வலுவான நாடாக கருதப்படுகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி இருக்கிறார்.

டேராடூனில் உள்ள ஐ.எம்.ஏ. எனப்படும் இந்திய ராணுவ பயிற்சிக் கழகத்தில் அதிகாரிகள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது. அதை ஒட்டி பேசிய ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறினார்.

இந்தியா பலவீனமான நாடு இல்லை என்ற அவர், உலகத்தின் பார்வையில் இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்து விட்டது என்றார். பின்னர் அவர் பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகளின் கண்கவர் அணிவகுப்பை பார்வை இட்டார். அணிவகுப்பின் போது ராணுவ ஹெலிகாப்டர்கள் மலர்களைத் தூவின.

இந்திய ராணுவ பயிற்சிக் கழகத்தில் ஆண்டுக்கு 2 முறை பயிற்சி நிறை அணிவகுப்பு நடப்பது வழக்கம். இந்த ஆண்டு இந்த நிறுவனத்தில் 377 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வீரர்கள் மட்டுமின்றி, நட்பு நாடுகளைச் சேர்ந்த 71 பேருக்கும் இந்த ஆண்டு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments